ராயக்கோட்டை, ஜூன் 14: ராயக்கோட்டை அருகே ஒடையாண்டஅள்ளியில் பாலதண்டாயுதபாணி சுவாமி கோயில் அமைந்துள்ளது. விழா மற்றும் இதர விஷேச நாட்களில், இக்கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்து வருவது வழக்கம். திரளான பக்தர்கள் வந்து தரிசனம் செய்த நிலையில், ஓசூர்- தர்மபுரி 4 வழிச்சாலை பணிக்காக கோயில் அகற்றப்பட்டது. இதையடுத்து, கோயில் மீண்டும் புதுப்பொலிவுடன் கட்டப்பட்டு கடந்த 6ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து 48 நாட்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. நேற்று கும்பாபிஷேகம் நடந்த 8ம் நாளில் சிறப்பு பூஜைகள், ஆராதனை மற்றும் அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
The post பாலதண்டாயுதபாணி கோயிலில் சிறப்பு பூஜை appeared first on Dinakaran.