திருச்செங்கோடு, ஜூன் 14: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எலச்சிபாளையம் மேற்கு ஒன்றிய குழு பேரவை கூட்டம் முன்னாள் ஒன்றிய செயலாளர் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. அரசியல் தீர்மானம் சம்பந்தமாக வகுப்பு ஆசிரியர் சிங்காரவேல், ஸ்தாபன அறிக்கை சம்பந்தமாக மாவட்ட செயற்குழு உறுப்பினர் தங்கமணி, மாவட்ட குழு சம்பந்தமாக மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுரேஷ் மற்றும் ஒன்றிய செயலாளர் ரமேஷ் உள்ளிட்டோர் பேசினர். மனு கொடுத்துள்ள அனைவருக்கும் வீட்டுமனை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
The post மா. கம்யூனிஸ்ட் பேரவை கூட்டம் appeared first on Dinakaran.