ஏற்காடு, ஜூன் 14: ஏற்காட்டில் கடந்த சில தினங்களாக பகல் நேரத்தில் வெயில் சுட்டெரித்து வந்தாலும், இரவு நேரங்களில் மழை பெய்த வண்ணம் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலையிலிருந்து ஏற்காட்டில் மிதமான காலநிலை நிலவியது. இந்நிலையில் மதியம் 4 மணியளவில் ஏற்காடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இதனால், மின்சாரம் துண்டிக்கப்பட்டு, ஏற்காடு பொதுமக்களும், வியாபாரிகளும் கடும் அவதி அடைந்தனர். மாலையில் அரை மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்ததால், பள்ளி முடிந்து கிளம்பிய மாணவர்கள் அவதியடைந்தனர். மழை நின்ற பின்பு கடும் பனிமூட்டம் நிலவி மாலை நேரமே இரவுபோல் காட்சியளித்தது. கடும் பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரிய விட்டபடியே சென்றனர். சுற்றுலாப் பயணிகள் பனிமூட்டத்தை ரசித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பனிமூட்டத்தால் ஏற்காடு ஏரி பனிபடலமாக காட்சியளித்தது.
The post ஏற்காட்டில் வெளுத்து வாங்கிய மழை appeared first on Dinakaran.