சென்னை: எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப் பணியால், தேஜஸ், மன்னை, குருவாயூர் விரைவு ரயில் உள்பட 5 ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் ரயில்கள்!!
*சென்னை எழும்பூர் – மதுரை இடையே இயக்கப்படும் தேஜஸ் விரைவு ரயில் (22671-22672) ஜூன் 20 முதல் ஆக.18-ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து காலை 6.22 மணிக்கு புறப்படும். அதேபோல், இரவு 9.25 மணிக்கு வந்தடையும்.
*எழும்பூர் – மன்னார்குடி இடையே இயக்கப்படும் மன்னை விரைவு ரயில் (16179-16180) ஜூன் 20 முதல் ஆக.18-ம் தேதி வரை தாம்பரத்தில் இரவு 11.22 மணிக்கு புறப்படும். மன்னார்குடியில் இருந்து தாம்பரத்துக்கு அதிகாலை 5 மணிக்கு வந்தடையும்.
*எழும்பூர் – திருச்செந்தூர் இடையே இயக்கப்படும் செந்தூர் விரைவு ரயில் (20605-20606) ஜூன் 20 முதல் ஆக.18-ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து மாலை 4.27 மணிக்கு புறப்படும். காலை 10 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.
*எழும்பூர் – குருவாயூர் இடையே இயக்கப்படும் விரைவு ரயில் (16127-16128) ஜூன் 20 முதல் ஆக.19-ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து காலை 10.47 மணிக்கு புறப்படும். இதுபோல, குருவாயூரில் இருந்து புறப்பட்டு இரவு 7.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
*எழும்பூர் – கொல்லம் இடையே இயக்கப்படும் விரைவு ரயில் (16101-16102), ஜூன் 20 முதல் ஆக.18-ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து மாலை 5.27 மணிக்கு புறப்படும். தாம்பரத்துக்கு அதிகாலை 2.45 மணிக்கு வந்தடையும்.
கடற்கரையில் இருந்து இயக்கப்படும் ரயில்கள்
*தாம்பரம் – ஹைதராபாத் இடையே இயக்கப்படும் விரைவு ரயில் (12759, 12760), ஜூன் 20 முதல் ஆக.18-ம் தேதி வரை சென்னை கடற்கரையில் இருந்து இயக்கப்படும்.
*மதுரை – ராஜஸ்தான் மாநிலம் பிகானிர் வாராந்திர விரைவு ரயில் (22631) ஜூன் 26 முதல் ஆக.14-ம் தேதி வரையும், மன்னார்குடி – ராஜஸ்தான் ஜோத்பூர் வாராந்திர விரைவு ரயில் ஜூன் 23 முதல் ஆக.18-ம் தேதி வரை எழும்பூருக்குப் பதிலாக கடற்கரை ரயில் நிலையத்தில் நின்றுசெல்லும்.
*எழும்பூர் – புதுச்சேரி இடையே இயக்கப்படும் புதுச்சேரி மெமு பாசஞ்சர் ரயில் கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, வந்தடையும்
*புதுடெல்லி – எழும்பூர் இடையே இயக்கப்பட்ட கிராண்ட் டிரங்க் ரயில் சென்ட்ரலில் இருந்து இயக்கப்படும்.
*பயணிகளை பயணத்திற்கு முன் திருத்தப்பட்ட நேரம் மற்றும் ஏறும் இடங்களை சரிபார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post எழும்பூரில் மறுசீரமைப்பு பணி… தேஜஸ், மன்னை, குருவாயூர் உட்பட 5 விரைவு ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு!! appeared first on Dinakaran.