விமான விபத்துகள் கடவுளின் செயல் அல்ல; விபத்துகள் தவிர்க்கப்படக் கூடியவை: பவன் கெரா

விமான விபத்துகள் கடவுளின் செயல் அல்ல; விபத்துகள் தவிர்க்கப்படக் கூடியவை என காங்கிரஸ் தலைவர் பவன் கேரா தெரிவித்துள்ளார். விமான இயக்க வழிமுறை, பாதுகாப்பு விதி, நெருக்கடியை எதிர்கொள்ளும் வழிமுறை விபத்துகளை தவிர்ப்பதற்கே. அமித்ஷா கூறுவதை பார்த்தால் பாதுகாப்பு கட்டமைப்பு, விதிமுறைகளை நிறுத்திவிடலாம் என்பதுபோல் உள்ளது.விபத்து நடப்பதை விதி என்று விட்டுவிட வேண்டும் என்று அமித்ஷா கூறுகிறாரா? என்று பவன் கெரா கேள்வி எழுப்பியுள்ளார். விபத்து நடந்தால் விதி பற்றி போதனை செய்யக் கூடாது; தவறுக்கு யார் பொறுப்பு என்பதை கண்டறிய வேண்டும். விபத்துக்கு விதியை காரணமாக கூறுவது பொறுப்பை தட்டிக் கழிப்பதாகும் என அமித்ஷாவை பவன் கெரா விமர்சித்துள்ளார்.

மற்றவர் துன்பத்தை உணராத அமித்ஷா -ஜெய்ராம் ரமேஷ்

மற்றவர்கள் துன்பத்தை உணராதவர் அமித்ஷா என்று காங்கிரஸ் பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார். விமான விபத்தில் சொந்தங்களை இழந்தவர்களின் துயரத்தை உணராமல் அமித்ஷா கருத்து கூறியுள்ளார். அகமதாபாத்தில் நடந்திருப்பது ஒரு விபத்து; யாராலும் விபத்துகளை தடுக்க முடியாது என அமித்ஷா கருத்து தெரிவித்துள்ளதாக . என தெரிவித்தார். நாட்டின் உள்துறை அமைச்சர் இப்படி கூறலாமா? பிறர் துயரத்தை உணராத பேச்சு என ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

 

The post விமான விபத்துகள் கடவுளின் செயல் அல்ல; விபத்துகள் தவிர்க்கப்படக் கூடியவை: பவன் கெரா appeared first on Dinakaran.

Related Stories: