ஜோலார்பேட்டை : நாட்றம்பள்ளி அருகே ரூ.9.90 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு மாவட்ட சேர்மன் என்.கே.ஆர்.சூரியகுமார், பேரூராட்சி தலைவர் சசிகலா சூரியகுமார் ஆகியோர் அடிக்கல் நாட்டினர். தமிழ்நாடு துணைமுதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் இருந்தபடி வீடியோகான்பரன்ஸ் மூலம் பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
இதையொட்டி திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பேரூராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ் குடிநீர் அபிவிருத்தி பணிக்கு ரூ.8.90 கோடியும், அடிப்படை கட்டமைப்பு வசதி திட்டத்தின்கீழ் வார்டு 1, அண்ணா தெரு கானாறு குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிக்கு ரூ.1 கோடியும் என மொத்தம் ரூ.9.90 கோடி நிதி ஒதுக்கீட்டில் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
இதனைத்தொடர்ந்து அம்பலூர் பகுதியில் நாட்றம்பள்ளி பேரூராட்சிக்கு தேவையான பேரூராட்சி குடிநீர் அபிவிருத்தி பணி மற்றும் அண்ணா தெரு பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
இதில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் என்.கே.ஆர்.சூர்யகுமார், நாட்றம்பள்ளி பேரூராட்சி தலைவர் சசிகலா சூரியகுமார் ஆகியோர் பங்கேற்று பணியை துவக்கி வைத்தனர். மேலும் இந்த நிகழ்ச்சியின்போது துணைச்செயற்பொறியாளர் அம்சா, செயல் அலுவலர் யமுனா, இளநிலை பொறியாளர் முரளி, அம்பலூர் ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன், பேரூர் இளைஞரணி அமைப்பாளர் கீர்த்தி ராஜன் மற்றும் துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post நாட்றம்பள்ளி அருகே ரூ.9.90 கோடி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா appeared first on Dinakaran.