சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.3.8 கோடி மதிப்புள்ள உயர்ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தாய்லாந்து நாட்டில் இருந்து சென்னை வழியாக பெங்களூருவுக்கு கடத்த முயன்ற 3.8 கிலோ உயர்ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உள்நாட்டு விமானத்தில் பயணி ஒருவர் கடத்தி வந்த 2.8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தாய்லாந்து நாட்டில் இருந்து சென்னை வந்த சரக்கு விமானத்தில் இருந்து 1 கிலோ உயர்ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2 மாதங்களில் ரூ.10 கோடி மதிப்பிலான ஹைட்ரோபோனிக் கஞ்சா சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 2 மாதங்களில் ஹைட்ரோபோனிக் கஞ்சாவை கடத்தி வந்த 2 பேர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மே மாதம் தாய்லாந்தில் இருந்து சென்னை வழியாக பெங்களூருவுக்கு கடத்த முயன்ற ரூ.6 கோடி மதிப்பு 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
The post சென்னை விமான நிலையத்தில் ரூ.3.8 கோடி மதிப்புள்ள உயர்ரக கஞ்சா பறிமுதல் appeared first on Dinakaran.