குன்னம், ஜூன் 13: பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் கிராமத்தில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் பாமகவினர் ஏராளமானோர் திமுகவில் இணைந்தனர். அப்போது, பாமக நிர்வாகி தனபால் தலைமையில், பத்துக்கும் மேற்பட்டோர் திமுக ஒன்றிய செயலாளர் நீலமேகம் தலைமையில் திமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு, பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் கிளை செயலாளர்கள் வயலப்பாடி செந்தில், அகரம்சீகூர் அன்பு, பூக்கடை ஆதிமூலம், வதிஷ்டபுரம் கனிமொழி பன்னீர்செல்வம், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் சண்முகம், கீழப்பெரம்பலூர் பழனிவேல், சுப்ரியா வெங்கடேசன், இளைஞரணி அன்பு செல்வன், தகவல் தொழில் நுட்ப அணி சுரேஷ், சிவநேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post அகரம்சீகூர் கிராமத்தில் திமுக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் appeared first on Dinakaran.