அதன் பின்னர் அவரை காணவில்லை. அவரது செல்போனும் அணைத்து வைக்கப்பட்டு இருந்ததால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்நிலையில் பூச்சோ பகுதியல் ஆதேஷ் பல்கலைக்கழகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் காரில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்தனர்.
காரில் காஞ்சன் குமாரி சடலமாக கிடந்தார். சடலத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே காஞ்சன் குமாரியின் மரணத்துக்கான உண்மை காரணம் தெரியவரும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டை சேர்ந்த கும்பல் ஒன்று அவரை எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.
The post இன்ஸ்டா பெண் பிரபலம் காஞ்சன் குமாரி காரில் சடலமாக மீட்பு: பஞ்சாபில் பரபரப்பு appeared first on Dinakaran.