விவசாயியிடம் பைக்கை பறித்துச்சென்றவர் கைது செய்யாறு அருகே கத்தியை காட்டி

செய்யாறு, ஜூன் 13: செய்யாறு அருகே விவசாயியிடம் கத்தியை காட்டி மிரட்டி பைக்கை பறித்துச்சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த பெருமாந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் சூர்யா(20). ஐடிஐ முடித்துவிட்டு விவசாயம் பார்த்து வருகிறார். இவர் சில தினங்களுக்கு முன்பு தனது நண்பரின் பைக்கை வாங்கிக்கொண்டு விவசாய நிலத்திற்கு சென்றார். அங்கு வந்த வாலிபர், வழிமறித்து கத்திமுனையில் பைக்கை பறித்துக்கொண்டு சென்றார். இதுகுறித்து சூர்யா மோரணம் போலீசில் நேற்றுமுன்தினம் புகார் செய்தார். அதன்பேரில் எஸ்ஐ கிருஷ்ணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். விசாரணையில், செய்யாறு அடுத்த பில்லாந்தி கிராமத்தை சேர்ந்த அப்பத்தா என்கிற விக்கி(23) என்பவர் சூர்யாவிடம் பைக்கை பறித்தது தெரியவந்தது. வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் திருவண்ணாமலை அருகே தேனிமலை பகுதியில் மறைந்திருந்த விக்கியை எஸ்ஐ கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் பிடித்து கைது செய்தனர். அவரிடம் பைக்கை பறிமுதல்ெசய்தனர். கைது செய்த விக்கியை செய்யாறு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். சிறையில் அடைக்கப்பட்ட விக்கி மீது, செய்யாறு, பெரணமல்லூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் உள்ளிட்ட காவல்நிலையங்களில் கஞ்சா, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post விவசாயியிடம் பைக்கை பறித்துச்சென்றவர் கைது செய்யாறு அருகே கத்தியை காட்டி appeared first on Dinakaran.

Related Stories: