செய்யாறு, ஜூன் 13: செய்யாறு அருகே தனியார் கல்லூரி விடுதியில் பேராசிரியர் மனைவியின் 4 சவரன் தங்க வளையல்கள் மாயமானது. திருவண்ணாமலை மாவட்டம் ெசய்யாறு அடுத்த வடமாவந்தல் பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு பேராசிரியராக பணியாற்றி வருபவர் ராமு. வெளியூரை சேர்ந்த இவர், கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கியுள்ளார். ராமுவின் மனைவி அஞ்சலை(33). இவர் கடந்த மாதம் 9ம் தேதி தனது கணவரை பார்ப்பதற்காக கல்லூரி விடுதிக்கு வந்தார். அஞ்சலை முகம் கழுவதற்காக கையில் அணிந்திருந்த 4 சவரன் வளையலை கழற்றி அங்குள்ள டேபிளில் வைத்துவிட்டு சென்றார். மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது தங்க வளையலை காணவில்லை. அப்போது ராமு வீட்டில் உள்ள மற்றொரு அறையில் இருந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அஞ்சலை தூசி போலீசில் நேற்றுமுன்தினம் புகார் செய்தார். அதன்பேரில் எஸ்ஐ பழனிவேல் வழக்குப்பதிவு செய்து அறையில் புகுந்து நகையை திருடிய நபர் யார்? என விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
The post பேராசிரியர் மனைவியின் 4 சவரன் நகை திருட்டு செய்யாறு அருகே கல்லூரி விடுதியில் appeared first on Dinakaran.