14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் கார்பெண்டர் கைது அணைக்கட்டு அருகே மனநலம் பாதிக்கப்பட்ட

வேலூர்,ஜூன் 13: அணைக்கட்டு அருகே மனநலம் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கார்பெண்டரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்தனர். வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். இந்நிலையில் கடந்த 11ஆம் தேதி விவசாய கூலி வேலைக்கு சென்ற அவரது தாய், மனநிலை பாதிக்கப்பட்ட மகளையும் தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார். விவசாய நிலத்திற்கு சென்ற சிறுமியின் தாய் மகளை மரத்தடியில் உட்கார வைத்துவிட்டு நெல் நடவு செய்ய சென்றுள்ளார். சிறிது நேரத்திற்கு பிறகு வந்து பார்த்தபோது அங்கிருந்த மகளை காணவில்லை.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் மகளை பல்வேறு இடங்களில் தேடிச் சென்றார். அப்போது அணைக்கட்டு அடுத்த அகரம் கொல்லைமேட்டைசேர்ந்த நந்தகோபால் (31) என்பவர் தனது மகளை பலாத்காரம் செய்ததை பார்த்து அலறி கூச்சலிட்டுள்ளார். சிறுமியின் தாய் வருவதை கண்ட நந்தகோபால் அங்கிருந்து தப்பி ஒடியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் வேலூர் அனைத்து மகளிர் போலீசில் நேற்று புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து, நந்தகோபாலை கைது செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட நந்தகோபால் கார்பெண்டர் வேலை செய்து வந்ததும் அவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர் என்பது போலீசார் விசாரணை தெரியவந்தது.

The post 14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் கார்பெண்டர் கைது அணைக்கட்டு அருகே மனநலம் பாதிக்கப்பட்ட appeared first on Dinakaran.

Related Stories: