வேலூர் மாநகராட்சி கமிஷனர் திடீர் பணியிடமாற்றம் புதிய கமிஷனர் நியமனம்

வேலூர், ஜூன்13: வேலூர் மாநகராட்சி கமிஷனர் திடீரென பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய கமிஷனர் நியமிக்கப்பட்டார். வேலூர் மாநகராட்சி கமிஷனராக ஜானகி பணிபுரிந்து வந்தார். இவர் திடீரென சென்னை நதிகள் மறுசீரமைப்பு திட்ட இயக்குனராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக சென்னை நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த இணை இயக்குனர் ஆர்.லட்சுமணன், வேலூர் மாநகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த உத்தரவினை அரசு முதன்மைசெயலாளர் கார்த்திகேயன் பிறப்பித்துள்ளார். இந்த பணியிடமாற்றத்தை தொடர்ந்து இன்று புதிய கமிஷனர் லட்சுமணன் வேலூர் கமிஷனராக பொறுப்பேற்றுக்கொள்வார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post வேலூர் மாநகராட்சி கமிஷனர் திடீர் பணியிடமாற்றம் புதிய கமிஷனர் நியமனம் appeared first on Dinakaran.

Related Stories: