குட்கா விற்பனை செய்தவர் கைது

பெரும்புதூர், ஜூன் 13: தாம்பரம் அருகே மளிகை கடையில் பதுக்கி குட்கா விற்பனை செய்தவரை, போலீசார் கைது செய்தனர். தாம்பரம் அருகே படப்பை, ஆதனஞ்சேரி கலைஞர் நகரில் உள்ள மளிகை கடை ஓன்றில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து, விற்பனை செய்யப்படுவதாக மணிமஙகலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மணிமங்கலம் போலீசார், நேற்று கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கடையில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட ஹான்ஸ், கூல்லிப் உள்ளிட்ட 13 கிலோ குட்கா புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, கடை உரிமையாளர் கனகராஜ் (49) என்பவரை கைது செய்து, நீதிமன்றத்தில் அஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post குட்கா விற்பனை செய்தவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: