காரைக்குடி, ஜூன் 13: காரைக்குடியில் இருந்து ராயவரம் வரை செல்லக்கூடிய முதல்வர் மு.க.ஸ்டாலினின் சிறப்பு திட்டமான மகளிர் விடியல் பயணம் திட்ட டவுன்பஸ் மக்கள் பயன்பாட்டுக்கு துவக்கி வைக்கும் விழா நடந்தது. எம்எல்ஏ மாங்குடி, மாநகராட்சி மேயர் எஸ்.முத்துத்துரை ஆகியோர் துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் எம்எல்ஏ மாங்குடி பேசுகையில், பஸ், சாலை வசதி போன்றவை உடனுடக்குடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இப்பகுதிகளில் கடந்த காலங்களில் நிறுத்தப்பட்ட பஸ் சேவையை மீண்டும் செயல்படுத்தி உள்ளோம். தவிர புதிய வழித்தடங்களில் பஸ் சேவை துவங்கப்பட்டுள்ளது. அந்தவகையில் 20க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் அரசு பஸ் சேவை துவங்கப்பட்டுள்ளது. தற்போது முதல்வரின் சிறப்பான திட்டமான மகளிர் விடியல் பயண திட்டத்தின் கீழ் காரைக்குடி முதல் ராயவரம் வரை டவுன்பஸ் இயக்கப்பட உள்ளது என்றார். மாநகராட்சி மேயர் முத்துத்துரை பேசுகையில், விடியல் பயணம் திட்டத்தின் மூலம் தினமும் 56 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பயனடைந்து வருகிறார்கள், என்றார்.
The post மகளிர் விடியல் பயணம் நகர பேருந்து துவக்கம் appeared first on Dinakaran.