குறுவை தொகுப்பு திட்டத்தை உடனே அறிவிக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: குறுவைப் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவதற்கு இரு வாரங்களுக்கு முன்பே குறுவை தொகுப்பு திட்டத்தை அறிவித்திருக்க வேண்டும். நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு ரூ.2369 ஆகவும் சன்னரக நெல்லுக்கான ஆதரவு விலையை ரூ.2389 ஆகவும் ஒன்றிய அரசு உயர்த்தியிருக்கிறது. இது போதுமானதல்ல. ஒன்றிய அரசிடம் பேசி கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.2,700 வீதம் உயர்த்தச் செய்ய வேண்டும். மாநில அரசு அதன் பங்காக ரூ.800 ஊக்கத் தொகை வழங்குவதன் மூலம் குவிண்டாலுக்கு ரூ.3500 கிடைக்க வகை செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, வழக்கமான பொருட்களுடன் ஏக்கருக்கு ரூ.5,000 வீதம் ஊக்குவிப்பு மானியமும் சேர்த்து குறுவைத் தொகுப்பை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post குறுவை தொகுப்பு திட்டத்தை உடனே அறிவிக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: