சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: தமிழ்நாடு அரசின் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியிலும் “நான் முதல்வன்” திட்டத்திலும் பயின்ற நம் மாணவர்கள் யுபிஎஸ்சி முதனிலை தேர்வு முடிவுகளில் இதுவரை இல்லாத எண்ணிக்கையில் சாதனை படைத்துள்ளனர். முதன்மை தேர்வு, நேர்முகத் தேர்விலும் அடுத்து நீங்கள் முத்திரை பதிக்க வாழ்த்துகிறேன். உங்கள் வெற்றிமுகங்களை நேரில் காண ஆவலாய் இருக்கிறேன். இந்த சாதனைக்கு உறுதுணையாக இருந்த அதிகாரிகளுக்கும் பயிற்றுநர்களுக்கும் என் பாராட்டுகளை உரித்தாக்குகிறேன். தமிழ்க்கொடி உயர உயரப் பறக்கட்டும்!.
The post யுபிஎஸ்சி முதனிலை தேர்வில் சாதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் மாணவர்களுக்கு பாராட்டு appeared first on Dinakaran.