இந்த வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜெ.ஓம் பிரகாஷ் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன்கள் கவுதம சிகாமணி, அசோக் சிகாமணி உள்ளிட்டோர் நேரில் ஆஜராகி இருந்தனர். அவர்களுக்கு கூடுதல் குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன. இதையடுத்து, வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க கோரி முன்னாள் அமைச்சர் பொன்முடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அப்போது பொன்முடி தரப்பில், அரசு பணி காரணமாக தன்னால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை.
தற்போது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாகவும், திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாகவும், திமுகவின் செயற்குழு உறுப்பினராக இருப்பதாலும், தனது வயதையும் கருத்தில் கொண்டு விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது. இதற்கு அமலாக்கத்துறை தரப்பில், பொன்முடி ஆஜராக விலக்களிக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பொன்முடி நேரில் ஆஜராவதில் விலக்களிக்க கோரிய மனு மீது வரும் 21ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக் கூறி, பிரதான வழக்கை ஜூலை 7ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
The post அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு ஆஜராக விலக்கு கோரி பொன்முடி மனு: சிபிஐ நீதிமன்றத்தில் வரும் 21ல் தீர்ப்பு appeared first on Dinakaran.