அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உயிரிழப்பு..!!

அகமதாபாத்: அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உயிரிழந்தார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து ஏர் இந்தியாவின் AI171 போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் லண்டனுக்கு புறப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் 2 பைலட், 10 விமான ஊழியர்கள் மற்றும் 230 பயணிகள் என்று மொத்தமாக 242 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்த விமானம் டேக் ஆஃப் ஆன சில நிமிடங்களிலெயே விமான நிலையம் அருகில் இருந்த மேகானி நகரின் பிஜெ மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடத்தின் மீது விழுந்து நொறுங்கியது.

இதனால் வானளவு கரும்புகை எழுந்தது. இந்த விமானத்தில் பயணித்த 170 பேர் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த மீட்பு பணிகளில் மாணவர்கள் மற்றும் 90 பேர் கொண்ட மீட்புப் படையும், தீயணைப்பு குழுவினரும் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விமானத்தில் பயணித்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி (68) மரணமடைந்தார். லண்டனில் உள்ள தனது மகளை பார்க்க சென்றபோது நிகழ்ந்த விமான விபத்தில் நிகழ்ந்துள்ளது. விமானத்தின் முதல் வகுப்பின் இரண்டாவது இருக்கையில் விஜய் ரூபானி பயணித்துள்ளார். இந்த விமான விபத்தில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி விஜய் ரூபானி உயிரிழந்தார்.

The post அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: