மகாராஷ்டிராவில் நடைபெற்ற தேர்தலின்போது 41 லட்சம் வாக்குகள் சேர்ப்பதற்கு உரிய பதில் அளிக்கப்படவில்லை. வக்ப் வாரியம் பற்றி மறுபரிசீலனை குறித்து கேள்வி கேட்டபோது எந்த பதிலும் கூறாமல் உள்ளது. இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தாக்குதல் நடத்தி வருகிறது. மோடி ஊமையாக இருந்து வருகிறார். மணிப்பூர் இன்னும் பற்றி எரிகிறது. அதற்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. பாஜக அரசு தன் பதவியை தக்கவைத்துக் கொள்ளத்தான் ஆர்வம் காட்டி வருகிறது. தமிழகத்தில் பாஜகவுக்கு எதிர்காலம் கிடையாது. தற்போது காங்கிரஸ், திமுக கூட்டணி வலுவான கூட்டணியாக உள்ளது.
மாணவர்களின் வசதிக்காக நிலவையில் உள்ள கல்வித் தொகையை ஒன்றிய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும். பாஜக ஆட்சியில் ராணுவத்துறையில் ஆட்கள் குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார். பேட்டியின்போது பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் ஏ.ஜி.சிதம்பரம், முன்னாள் மாவட்ட தலைவர் திருவேற்காடு லயன் டி.ரமேஷ், மாநில நிர்வாகிகள் ஏகாட்டூர் ஆனந்தன், வக்கீல் ஆர்.சசிகுமார், ஆ.திவாகர், வட்டார தலைவர்கள் முகுந்தன், சதீஷ் ஆகியோர் இருந்தனர்.
The post திமுக, காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது; பாஜகவுக்கு எதிர்காலம் கிடையாது: சசிகாந்த் செந்தில் எம்பி பேட்டி appeared first on Dinakaran.