“மே டே” என்பது உலகளவில் விமானிகள் மற்றும் கடற்படைகள் அவசர அழைப்பு குறியீடாக பயன்படுத்தும் சொல். இது “Help me” அல்லது “Emergency” என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது. இந்த வார்த்தை பிரெஞ்சு மொழியில் “m’aidez” உதவி செய்யுங்கள் என்பதிலிருந்து வந்ததாகும். விமானத்தில் தீவிரமான தொழில்நுட்ப கோளாறு, தீ, எரிபொருள் குறைவு, பயணிகள் உயிருக்கு அபாயம் போன்ற சூழ்நிலைகளில் விமானி தன்னுடைய நிலையை உடனடியாக கட்டுப்பாட்டு மையத்துக்கு தெரிவிக்க “மே டே” என மூன்று முறை கூறுகிறார். இது மிகுந்த அவசர நிலையை குறிக்கிறது.
“மே டே” க்கு அடுத்த முக்கிய குறியீடு “Pan-Pan”. இது அவசர நிலை என்றாலும், உடனடி உயிருக்கு அபாயம் இல்லாத சூழ்நிலையை குறிக்கிறது. “மே டே” என்று கூறும் போது, விமான கட்டுப்பாட்டு அறை உடனடியாக அந்த விமானத்திற்கு முன்னுரிமை அளித்து, தேவையான உதவிகளை ஏற்பாடு செய்யும். இது விமானிகள் மற்றும் பயணிகள் பாதுகாப்புக்காக மிக அவசியமான நடைமுறையாகும். விமானிகள் “மே டே” என்று கூறுவது, விமானத்தில் மிகுந்த அவசர நிலை ஏற்பட்டதை உலகளவில் புரிந்துகொள்ளும் வகையில் பயன்படுத்தப்படும் அவசர குறியீட்டு சொல் என்பதே இதன் முக்கிய நோக்கம்.
The post அகமதாபாத் விமான விபத்து.. மே டே.. மே டே.. மே டே.. கட்டுப்பாட்டு அறைக்கு விமானி கொடுத்த கடைசி தகவல்: “மே டே” என்றால் என்ன? appeared first on Dinakaran.