தங்கம் விலை தொடர் ஏறுமுகம் 2 நாட்களில் ரூ.1,240 எகிறியது: மீண்டும் பவுன் 73 ஆயிரத்ைத நெருங்கியது

சென்னை: தங்கம் விலை தொடர்ந்து 2 நாட்களில் பவுனுக்கு ரூ.1240 உயர்ந்தது. பவுன் மீண்டும் 73 ஆயிரத்தை நெருங்கியதால் நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்றம், இறக்கத்துடனேயே காணப்பட்டு வருகிறது. சில நேரங்களில் அதிரடியாக உயர்வதுமான போக்கும் இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 7ம் தேதி தங்கம் விலை அதிரடி சரிவை சந்தித்தது. அன்றைய தினம் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1200 குறைந்து ஒரு பவுன் ரூ.71,840க்கு விற்பனையானது. இந்த விலை குறைவு நகை வாங்குவோருக்கு ஆறுதலை ஏற்படுத்தியிருந்தது. 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. தொடர்ந்து 9ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.200 குறைந்து ஒரு பவுன் ரூ.71,640க்கும் விற்பனையானது.

10ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு பவுன் ரூ.71,560க்கும் விற்கப்பட்டது. தொடர்ந்து 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,480 வரை குறைந்தது. இந்த தொடர் விலை குறைவு நகைவாங்குவோருக்கு சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதற்கிடையில் நேற்று மீண்டும் தங்கம் விலை அதிகரிக்க தொடங்கியது. நேற்றைய தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,020க்கும், பவுனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு பவுன் ரூ.72,160க்கும் விற்பனையானது. இந்த அதிரடி விலை உயர்வு நகை வாங்குவோருக்கு மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விலை உயர்வு அதிர்ச்சியை நகைவாங்குவோர் தாங்குவதற்குள் இன்று மீண்டும் தங்கம் விலை உயர்வை சந்தித்தது.

இன்று காலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,100க்கும், பவுனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு பவுன் ரூ.72,800க்கு விற்பனையானது. 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை ரூ.1,240 உயர்ந்துள்ளது. மீண்டும் தங்கம் விலை பவுன் ரூ.73 ஆயிரத்தை நெருங்கியுள்ளது நகை வாங்குவோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி 119 ரூபாய்க்கும், பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது.

 

The post தங்கம் விலை தொடர் ஏறுமுகம் 2 நாட்களில் ரூ.1,240 எகிறியது: மீண்டும் பவுன் 73 ஆயிரத்ைத நெருங்கியது appeared first on Dinakaran.

Related Stories: