சமூக ஊடக பிரபலமான கமல் கவுர் என்ற பெண் பஞ்சாப் மாநிலம் பதிண்டா அருகே மர்மமாக உயிரிழப்பு!!

பஞ்சாப்: சமூக ஊடக பிரபலமான கமல் கவுர் என்ற பெண் பஞ்சாப் மாநிலம் பதிண்டா அருகே மர்மமாக உயிரிழந்துள்ளர். கஞ்சன் குமாரி என்ற இயற்பெயர் கொண்ட கமல் கவுர் சமூக ஊடக ஆர்வலர். இவர் லூதியானாவில் வசித்து வருகிறார். இவர் ரீல்ஸ், குறும் வீடியோக்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டுவார். இவர் இன்ஸ்டாகிராமில் 3.83 லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளார். அவற்றில் சில சர்ச்சையில் சிக்கின.

இந்நிலையில், பதிண்டாவில் தனியார் பல்கலைக்கழகம் அருகே நிறுத்தியிருந்த காரில் கமல் கவுர் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பதிண்டாவில் உள்ள ஆதேஷ் மருத்துவப் பல்கலை. அருகே காரில் இருந்து தூர்நாற்றம் வருவதாக பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கமல் கவுரின் உடல் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, பஞ்சாப் காவல்துறை கொலை விசாரணையைத் தொடங்கியுள்ளது. போலீஸ் வட்டாரங்களின்படி, அவர் வேறு இடத்தில் கொல்லப்பட்டு, லூதியானா மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு காரில் அவரது உடல் கொண்டு செல்லப்பட்டு, மருத்துவ பல்கலைக்கழகத்தின் பார்க்கிங் பகுதியில் விடப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

The post சமூக ஊடக பிரபலமான கமல் கவுர் என்ற பெண் பஞ்சாப் மாநிலம் பதிண்டா அருகே மர்மமாக உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: