பந்தலூர், ஜூன் 12: பந்தலூர் அருகே பிதர்காடு ஆனப்பன்சோலை பகுதியில் வீட்டின் பின்புறம் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நெலாக்கோட்டை ஊராட்சி நிர்வாகம் சார்பில் மண் சரிவை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. பந்தலூர் அருகே நெலாக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பிதர்காடு ஆனப்பன்சோலை பகுதியில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசித்து வரும் கூலித்தொழிலாளி தங்கராஜ் என்பவரது வீட்டின் பின்புறம் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த கனமழைக்கு மண் சரிவு ஏற்பட்டு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மண் சரிவு அகற்ற முடியாமல் வீட்டின் உரிமையாளர் சிரமப்பட்டு வருகிறார். கோடை மழை துவங்கும் முன் மண்சரிவை அகற்றவில்லை என்றால் மேலும் மண் சரிவு ஏற்பட்டு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. எனவே நெலாக்கோட்டை ஊராட்சி நிர்வாகம் சார்பில் மண் சரிவை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உரிமையாளர் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
The post பந்தலூர் அருகே வீட்டின் பின்புறம் திடீர் மண் சரிவு appeared first on Dinakaran.