வத்திராயிருப்பு, ஜூன் 12: வத்திராயிருப்பு காளியம்மன் ேகாயில் பொங்கல் திருவிழா நடைபெற்றது. வத்திராயிருப்பு மேலப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள காளியம்மன் கோயில் திருவிழா ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் நடைபெறும். இந்த திருவிழாவில் நேற்று நள்ளிரவு அம்மனுக்கு கரகம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து பொதுமக்களுக்கு காளியம்மன் காட்சியளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வீதி உலா வந்த அம்மனுக்கு பொதுமக்கள் நேர்த்திக்கடனை செய்து வழிபட்டனர். வீதி உலா முடிவுற்றவுடன் அம்மனை கோயிலில் இறக்கி வைத்து நேற்று காலை பொங்கலிட்டு வழிபட்டனர். பின்னர் மாலை காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் முளைப்பாரி ஊர்வலம் மேளதாளங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தனர். இந்த பொங்கல் திருவிழாவிற்கான ஏற்பாட்டினை விழா குழுவினர் செய்திருந்தனர்.
The post வத்திராயிருப்பு காளியம்மன் கோயில் பொங்கல் திருவிழா appeared first on Dinakaran.