அரவக்குறிச்சி, ஜூன் 12: அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர தனித் தேர்வர்கள் மற்றும் விண்ணப்பம் செய்யாத மாணவர்களும் வருகிற 14ம் தேதிக்குள் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் என கல்லூரி முதல்வர் அறிவித்துள்ளார். அரவக்குறிச்சி அரசு கலைக்கல்லூரி முதல்வர் வசந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. கடந்த 6ம் தேதி தொடங்கிய இந்த பொது கலந்தாய்வு வரும் 14ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த பொது கலந்தாய்வில் இதுவரை பங்கேற்காத மாணவர்களும், இதுவரை விண்ணப்பம் செய்யாத மாணவ, மாணவிகளும் வருகிற 14ம் தேதி வரை நடைபெற உள்ள கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் என்றும், மேலும் தனித் தேர்வு எழுதியவர்களும் ஏற்கனவே பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு விண்ணப்பம் செய்யாத மாணவர்களும் 14ம் தேதி வரை நடைபெற உள்ள கலந்தாய்வில் கலந்துகொண்டு பயன்படலாம் என முதல்வர் வசந்தி தெரிவித்துள்ளார்.
The post அரவக்குறிச்சி அரசு கல்லூரியில் சேர தனித் தேர்வா்களுக்கு அழைப்பு appeared first on Dinakaran.