நாகப்பட்டினம் சுயஉதவி குழுக்களை சேர்ந்த 608 பயனாளிகளுக்கு ரூ.49.90 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: கலெக்டர், எம்எல்ஏ வழங்கினர்

நாகப்பட்டினம், ஜூன் 12: நாகப்பட்டினம் மாவட்டத்தில் மகளிர் சுயஉதவி குழுக்களை சேர்ந்த 608 பயனாளிகளுக்கு ரூ.49 கோடியே 93 லட்சம் மதிப்பிலான நலத்திட்டங்களை கலெக்டர் ஆகாஷ் வழங்கினார். துணை முதல்வர் உதயநிதிஸ்டாலின் சென்னையில் மகளிர் சுயஉதவி குழுவைச் சேர்ந்தவர்களுக்கு வங்கி கடன் இணைப்புகள் வழங்கினார். இந்த விழா வீடியோ கான்பரன்சிங் வாயிலாக நாகப்பட்டினத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கலையரங்கில் நடைபெற்றது. விழா முடிவில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு வங்கி கடன் வழங்குதல், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களில் தொழில் முனைவோராக உள்ள உறுப்பினர்களுக்கு பெண்கள் தொழில் முனைவோர் கடன் வழங்குதல் ஆகிய விழா நடைபெற்றது.

விழாவிற்கு கலெக்டர் ஆகாஷ் தலைமை வகித்தார். கீழ்வேளூர் தொகுதி எம்எல்ஏ நாகைமாலி, வேளாங்கண்ணி பேரூராட்சி துணை தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன், உதவி திட்ட அலுவலர்கள் சண்முகவடிவு, சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஊரகம் பகுதியை சேர்ந்த மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடனாக 417 பயனாளிகளுக்கு ரூ.38 கோடியே 28 லட்சம் மதிப்பிலும், ஊரகம் பகுதியை சேர்ந்த மகளிர் தொழில் முனைவோர் கடனாக 47 பயனாளிகளுக்கு ரூ.56 லட்சமும், நகர் பகுதியை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடனாக 90 பயனாளிகளுக்கு ரூ.10 கோடியே 9 லட்சமும், வட்டார வளமைய கடனாக 45 பயனாளிகளுக்கு ரூ.19 லட்சமும், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் வாயிலாக 9 பயனாளிகளுக்கு ரூ.81 லட்சமும் என 608 பயனாளிகளுக்கு ரூ.49 கோடியே 93 லட்சத்தை கலெக்டர் ஆகாஷ் வழங்கினார்.

The post நாகப்பட்டினம் சுயஉதவி குழுக்களை சேர்ந்த 608 பயனாளிகளுக்கு ரூ.49.90 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: கலெக்டர், எம்எல்ஏ வழங்கினர் appeared first on Dinakaran.

Related Stories: