சித்தேஸ்வரர் கோயிலில் பௌர்ணமி வழிபாடு

திருக்காட்டுப்பள்ளி, ஜூன் 12: தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே திருச்சினம்பூண்டி சித்தாம்பிகை உடனமர் சித்தேஸ்வரர் கோயிலில் வைகாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு இரவு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சித்தேஸ்வரர் கோயில் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற சிவஸ்தலம் ஆகும். இக்கோயில் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. திருக்கானூரை மையமாகக் கொண்டு திருக்கானூர், திருப்புதகிரி, திருச்சடைவளந்தை, திருச்செந்தலை, திருக்காட்டுப்பள்ளி, திருநியமம், திருச்சினம்பூண்டி ஆகிய ஏழுர் சிவன் கோவில்களை உள்ளடக்கி நடைபெறும் சப்தஸ்தான (ஏழூர்)

ஸ்தலங்களில் ஒன்றான இக்கோயிலில் தினசரி வழிபாடுகளும், பௌர்ணமி நாட்களில் சிறப்பு வழிபாடும் நடைபெற்று சுவாமி, அம்மனுக்கு பால், தயிர்,தேன், சந்தனம் உள்ளிட்ட பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் புது வஸ்திரம் சாற்றி,புஷ்ப அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சுவாமிக்கு சிவபுராணம், கடை முடி பதிகம் பாடியும்,அம்மனுக்கு சகஸ்ரநாமபாராயணம் செய்தும் வழிபாடுகள் நடைபெற்றன.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

The post சித்தேஸ்வரர் கோயிலில் பௌர்ணமி வழிபாடு appeared first on Dinakaran.

Related Stories: