நெல்லை: நெல்லையில் சபாநாயகர் அப்பாவு நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீட்டில் பெரிதும் பாதிக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு. ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு நிதி கொடுத்ததாக கூறும் நயினார் நாகேந்திரன், எந்தத் திட்டத்திற்கு ஒன்றிய அரசு நிதி கொடுத்தது? என்பதை கூறட்டும். ்அமித்ஷா, நயினார் நாகேந்திரன் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி என கூறுகின்றனர் என்றால் எடப்பாடி பழனிச்சாமி கடைசி வரை பா.ஜ.வுடன் இருப்பாரா? என்பதை எடப்பாடி பழனிச்சாமியிடமே கேளுங்கள்.
அதிமுக எம்எல்ஏக்கள் நிறைய பேர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சுயமாக சிந்திப்பவர். விரைவில் நல்ல முடிவு எடுப்பார். இவ்வாறு சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
The post பாஜ கூட்டணியில் எடப்பாடி தொடர்வாரா என சந்தேகம்: சபாநாயகர் அப்பாவு appeared first on Dinakaran.