சேலம், ஜூன் 12: சேலம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில், தினமும் 550 டன் திடக்கழிவுகள் சேகரமாகிறது. பொதுமக்களிடம் இருந்து மக்கும் குப்பை, மக்காத குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள் என தரம் பிரித்து பெறப்படுகிறது. இவ்வாறு சேகரிக்கப்படும் குப்பைகள், அந்தந்த வார்டுக்கு உட்பட்ட நுண்ணுயிரி உரம் தயாரிக்கும் மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு மக்கும் குப்பையில் இருந்து நுண்ணுயிரி உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. சேலம் மாநகராட்சியில் சேகரமாகும் திடக்கழிவுகளில் மக்கும் தன்மையுள்ள கழிவுகளில் இருந்து செறிவூட்டப்பட்ட உயிரி எரிவாயு தயாரிக்கும் ஆலையை, பயோ காஸ் முறையில் அமைக்க தூய்மை இந்தியா திட்டத்தில் செயல்படுகிறது. இதற்கான திட்ட அறிக்கை ரூ.57.70 கோடியில் தயாரிக்கப்பட்டது.
அதன்படி, தினமும் 200 டன் வீதம் மக்கும் திடக்கழிவுகளை கையாளக்கூடிய ஆலையை செட்டிச்சாவடி குப்பை கிடங்கில் அமைக்கப்படுகிறது. இயற்கை எரிவாயு(பயோ சிஎன்ஜி)ஆலையை நிறுவ ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. வீடுகள், வணிக விற்பனை நிலையங்களில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுகளில் இருந்து உயிரி எரிவாயு உற்பத்தி செய்வதற்காக பொது- தனியார் பங்களிப்புடன் ஆலையை உருவாக்கப்படுகிறது. இதற்காக செட்டிசாவடியில் 8ஏக்கர் நிலத்தில் இந்த ஆலை அமைக்கிறது. இந்த ஆலையை அமைக்க இன்று தமிழக முதல்வர் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டுகிறார்.
The post ரூ.50 கோடியில் இயற்கை எரிவாயு உற்பத்தி ஆலை appeared first on Dinakaran.