அரசின் அரிய சாதனைகளை ஒவ்வொருவர் மனதிலும் பதிய வைக்க வேண்டும்

சேலம், ஜூன் 12: அரசின் அரிய சாதனைகளை, ஒவ்வொருவர் மனதிலும் பதிய வைக்க வேண்டும் என திமுகநிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசினார். சேலம் மாவட்ட எல்லையான பெரும்பள்ளத்தில் 11 கிமீ தொலைவுக்கு நடந்த ரோடு ஷோவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், மேட்டூர் நவப்பட்டி திருமலை மஹாலில் நடந்த திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திலும் பங்கேற்றார். அப்போது, முதல்வர் பேசியதாவது: கலைஞருக்கும், சேலத்திற்கும் உள்ள தொடர்பு, தொப்புள் கொடி உறவு போன்றது. கலைஞர் இங்கு தங்கியிருந்து மாவட்ட மக்களின் மனதை அறிந்தவர்.

அதனால், சேலம் மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார். அவர் கொண்டு வந்த திட்டங்கள், மாவட்டம் முழுவதும் திரும்பிய திசையெல்லாம் கவனம் ஈர்த்து நிற்கிறது. அதேபோல், ஏராளமான மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இத்திட்டங்கள் அனைத்து தரப்பினரிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதை நீங்கள் வீடுதோறும் முழுமையாக கொண்டு போய் சேர்க்க வேண்டும்.ஒவ்வொருவர் மனதிலும், அரசின் அரிய சாதனைகளை பதிய செய்ய வேண்டும். குறிப்பாக 2019, 2021 தேர்தல்களில் நாம் பெற்ற வாக்குகள், அதற்கான வாக்கு வித்தியாசங்களை ஆய்வு செய்து, அதிக வாக்குகளை பெருமளவில் அனைவரும் திறம்பட செயலாற்ற வேண்டும். மக்களுக்கும், கட்சியினருக்கும் திமு கழகமும், தமிழக அரசும் காவல் அரணாக நிற்கும். இவ்வாறு முதல்வர் பேசினார்.

The post அரசின் அரிய சாதனைகளை ஒவ்வொருவர் மனதிலும் பதிய வைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: