‘நான் ரவுடி என கூறி’ பைக்குகளை மடக்கி பொதுமக்களிடம் ரகளை ராணிப்பேட்டையை சேர்ந்த 4 வாலிபர்கள் கைது ஆரணியில் பரபரப்பு

ஆரணி, ஜூன் 12: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் காந்திசாலையில் உள்ள ஜெமினி பஸ்நிறுத்தம், மொழுகம்பூண்டி கூட்ரோடு ஆகிய பகுதிகளில் நேற்று 4 பேர் சாலையின் நடுவில் போக்குவரத்துக்கு இடையூராக நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் வாகனங்களை மடக்கி, பொதுமக்களை ஆபசாமாக பேசி ‘நான் ரவுடி’ என கூறி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால், அப்பகுதி மக்கள் ஆரணி டவுன், தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் எஸ்ஐகள் ஜெயச்சந்திரன், அருண்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூராக தகராறு செய்து வந்தது தெரியவந்தது.

தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் அங்கிருந்து பிரச்னை செய்யாமல் போக கூறியும் போகாமல் தொடர்ந்து, பொதுமக்களை மடக்கி தகராறு செய்து, ரகளையில் ஈடுபட்டனர். இதனால் 4 பேரையும் போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், அவர்கள் ராணிப்பேட்டை மாவட்டம், வாழப்பந்தல் கிராமத்தை சேர்ந்த அரவிந்தன்(29), விமல்(28), மற்றும் திமிரி அடுத்த சஞ்சிவிராயன் பேட்டை தினேஷ்(19), பெங்களூர் நார்த் பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமார் என்பது தெரியவந்தது. உடனே, போலீசார் அவர்களை கைது செய்தனர். நான் ரவுடி என கூறி பொதுமக்களிடம் வாலிபர்கள் ரகளை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post ‘நான் ரவுடி என கூறி’ பைக்குகளை மடக்கி பொதுமக்களிடம் ரகளை ராணிப்பேட்டையை சேர்ந்த 4 வாலிபர்கள் கைது ஆரணியில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: