நண்பர்களை பீர்பாட்டிலால் தாக்கி தலைமறைவான 4 பேருக்கு வலை மீன் கடையில் நின்றிருந்த

பள்ளிகொண்டா, ஜூன் 12: வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த அகரம்சேரி கிழக்கு காலனியை சேர்ந்தவர் செந்தில்குமார்(43). இவரது நண்பர் தினகரன். இந்நிலையில், தினகரன் கடந்த 8ம் தேதி மாலை 6 மணியளவில் அகரம்சேரி டாஸ்மாக் கடை அருகே உள்ள தள்ளுவண்டி கடையில் மீன் சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த அசோக்குமார், அரவிந்தன், பிரதாப், அஜய் ஆகிய 4 பேரும் மீன் சாப்பிட்டு கொண்டிருந்த தினகரனிடம் வீண் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனை பார்த்து தட்டி கேட்க வந்த செந்தில் குமாரை தகாத வார்த்தைகளால் திட்டியும், கையில் இருந்த பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து தினகரன் மற்றும் செந்தில்குமார் மாதனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று திரும்பினர். இந்நிலையில் நேற்று முன்தினம் இதுகுறித்து செந்தில்குமார் பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் கொலை வெறி தாக்குதல் நடத்தி தலைமறைவான 4 பேரை போலீசார் வழக்குப்பதிந்து வலைவீசி தேடி வருகின்றனர்.

The post நண்பர்களை பீர்பாட்டிலால் தாக்கி தலைமறைவான 4 பேருக்கு வலை மீன் கடையில் நின்றிருந்த appeared first on Dinakaran.

Related Stories: