மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர் கூட்டம்

காஞ்சிபுரம், ஜூன் 12: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு இரண்டு மாதத்திற்கு ஒருமுறை கலெக்டர் தலைமையில் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுகிறது. அதன்படி, மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, நாளை (13ம் தேதி) மாலை 5 மணிக்கு மக்கள் நல்லுறவு கூட்டரங்கில், கலெக்டர் தலைமையில் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட உள்ளது. இம்முகாமில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளிக்கலாம். மேலும், விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் 044-2999 8040 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: