வேலஞ்சேரி கொள்முதல் நிலையத்தில் இருந்து நுகர்பொருள் வாணிபக் கிடங்கிற்கு நெல் மூட்டைகள் அனுப்பி வைப்பு

திருத்தணி, ஜூன் 12: திருத்தணி அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் நேற்று நுகர்பொருள் வாணிபக் கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருத்தணி அருகே வேலஞ்சேரியில் தமிழக அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் 40 கிலோ எடை கொண்ட சுமார் 1,000 நெல் மூட்டைகள் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு லாரிகள் மூலம் நுகர்பொருள் வாணிபக் கிடங்கிற்கு அனுப்பப்படுகிறது.

கடந்த சில நாட்களாக கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் லாரிகளில் இயக்கப்படாமல் கிடங்கில் தேங்கின. இதனால் விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகள், டிராக்டர்களில் நிறுத்திவைக்கப்பட்டு விவசாயி
கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தினகரன் நாளிதழில் நேற்று படத்துடன் செய்தி வெளியானது. செய்தி எதிரொலியாக கலெக்டர் பிரதாப் உத்தரவின் பேரில் நுகர்பொருள் மண்டல மேலாளர் லாரிகள் ஏற்பாடு செய்து நேற்று 2 லாரிகளில் 1,400 மூட்டைகளை கொள்முதல் செய்து லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் 3 நாட்களாக நின்றிருந்த டிராக்டர்களில் இருந்த நெல் கொள்முதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் வேணுகோபால் ராஜ் கூறுகையில், அரசின் நேரடி நெள் கொள்முதல் நிலையங்கள் விவசாயிகளுக்கு பெரும் உதவியாக உள்ளன. உடனுக்குடன் பணம் விவசாயிகளுக்கு செலுத்தப்படுகிறது. இருப்பினும் கொள்முதல் செய்வதில் ஏற்படும் இடையூறை தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மழை பெய்து வருவதால், அறுவடை செய்த நெல் நனைந்து வீணாகும் பாதிப்பு இருப்பதால் கொள்முதல் செய்யும் நெல் விரைந்து அனுப்பப்பட வேண்டும் என்றார்.

The post வேலஞ்சேரி கொள்முதல் நிலையத்தில் இருந்து நுகர்பொருள் வாணிபக் கிடங்கிற்கு நெல் மூட்டைகள் அனுப்பி வைப்பு appeared first on Dinakaran.

Related Stories: