ராஜஸ்தான் காங்கிரசில் திருப்பம் கெலாட், பைலட் மீண்டும் இணைந்தனர்: 5 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே மேடையில் பங்கேற்பு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடந்த போது முதல்வராக இருந்த அசோக் கெலாட், துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. 2020 ஆம் ஆண்டில் கெலாட்டுக்கு எதிராக 18 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் உதவியுடன் சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கியதால், ​​துணை முதல்வர் மற்றும் மாநில தலைவர் பதவியிலிருந்து சச்சின் பைலட்டை காங்கிரஸ் தலைமை நீக்கியது. அதன்பிறகு அசோக் கெலாட்டும், சச்சின் பைலட்டும் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வந்தனர். தற்போது மீண்டும் இருவரும் ஒன்றிணைந்து உள்ளனர். கடந்த சனிக்கிழமை ஜெய்ப்பூரில் உள்ள அசோக் கெலாட் வீட்டிற்கு சென்ற சச்சின் பைலட், தனது தந்தையும், ராஜஸ்தான் மூத்த காங்கிரஸ் தலைவராக இருந்த ராஜேஷ் பைலட்டின் 25வது ஆண்டு நினைவு தின நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வரும்படி அழைத்தார். இதை ஏற்று நேற்று நடந்த ராஜேஷ் பைலட் நினைவு தின நிகழ்ச்சியில் அசோக் கெலாட் கலந்து கொண்டுபேசுகையில், நாங்கள் எப்போது பிரிந்தோம்? எப்போதும் ஒன்றாக இருக்கிறோம் என்றார்.

The post ராஜஸ்தான் காங்கிரசில் திருப்பம் கெலாட், பைலட் மீண்டும் இணைந்தனர்: 5 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே மேடையில் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: