எங்கள் கூட்டணியில் மதவாதம் என்பதே கிடையாது ஒரு மதத்தை நம்பி யாரும் ஆட்சியமைக்க முடியாது: நயினார் நாகேந்திரன் பேட்டி

நெல்லை: எங்கள் கூட்டணியில் மதவாதம் என்பதே கிடையாது. ஒரு மதத்தை மட்டுமே நம்பி யாரும் ஆட்சியமைக்க முடியாது என நெல்லையில் பா.ஜ. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ தெரிவித்தார். இதுதொடர்பாக அவர், நெல்லையில் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: எங்கள் கூட்டணியில் எங்கும் மதவாதம் இல்லை. ஒரு மதத்தை நம்பி யாரும் ஆட்சிக்கு வர முடியாது. இந்தியாவில் பிறந்த அனைவரும் இந்துக்கள். இந்து என்பது ஒரு பண்பாடு. ஒரு வழிமுறை. இந்து என்ற மதம் இல்லை.

மதுரையில் நடக்கும் முருகன் பக்தர்கள் மாநாட்டில் 4 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம். இதில் கட்சி பாகுபாடு இன்றி எல்லோரும் பங்கேற்கலாம். இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து நீங்கள், ெநல்லை தொகுதியிலிருந்து நாங்குநேரி தொகுதிக்கு இடம் மாறுவதாகவும், அதற்கான பணிகள் நடந்து வருவதாகவும் நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, சிரித்து கொண்டே அது குறித்து பிறகு பார்க்கலாம் என்றார் நயினார் நாகேந்திரன்.

 

The post எங்கள் கூட்டணியில் மதவாதம் என்பதே கிடையாது ஒரு மதத்தை நம்பி யாரும் ஆட்சியமைக்க முடியாது: நயினார் நாகேந்திரன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: