கேரளா: கேரளாவில் பெய்து வரும் கனமழையால் இடுக்கி மாவட்டத்தில் உள்ள கல்லார்குட்டி அணை நிரம்பி வழிகிறது. அணை முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. உபரிநீர் திறப்பால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.