பதிவு செய்தால் மட்டும் சொத்துகளை முழுமையாக உரிமை கொண்டாட முடியாது: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு


புதுடெல்லி: சொத்துகளை உரிமை கொண்டாடுவது தொடர்பான வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம் நேற்று ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கி உள்ளது. அதாவது, ஒரு சொத்தை வெறுமென பதிவு செய்வதன் மூலமாக மட்டுமே அந்த சொத்திற்கு ஒருவர் முழுமையாக உரிமை கொண்டாட முடியாது. பதிவு ஆவணங்கள் என்பது கூடுதலான ஆதாரமாக மட்டுமே கருதப்படும். ஒரு சொத்தை முழுமையாக பயன்படுத்துவது வேறு ஒருவருக்கு மாற்றி விடுவது போன்றவற்றிற்கு இந்தப் பதிவு ஆவணங்கள் மட்டுமே போதுமானது கிடையாது. மாறாக அந்த சொத்து தொடர்பான அத்தனை ஆவணங்களும் முழுமையாக கொண்டிருப்பது தான் அந்த சொத்திற்கான உரிமையாளராக ஒருவரை அங்கீகரிக்கும்.

குறிப்பாக சொத்து அமைந்துள்ள பதிவு எண்கள் குறிப்பிட்ட சொத்தின் சொத்துரிமை யார் பெயரில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்ற உள்ளூர் அரசு அலுவலகத்தில் இருக்கும் ஆவணங்கள், சொத்து விற்கப்படுவதன் மூலம் அதன் உரிமை மாற்றப்படுகிறது என்றால் எவ்வளவு தொகைக்கு அது விற்கப்படுகிறது என்ற விவரங்கள் வேண்டும். மேலும் அதில் என்னென்ன விற்பனை நிபந்தனைகள் போன்றது உட்பட விற்பவர்கள் வாங்குபவர்களின் கையொப்பம், சாட்சிகளின் கையொப்பம், ஸ்டாம்ப் டியூட்டி, பத்திரப்பதிவு ஆவணங்களின் மேற்கொள்ளப்படும் பதிவு ஆவணங்கள், இவை அனைத்தும் முடிந்ததற்கு பிறகு சொத்துரிமைக்கான பத்திரப்பதிவு அலுவலகம் வழங்கும் சான்றிதழ்,

குறிப்பிட்ட அந்த சொத்தின் மீது எந்த வங்கிக் கடனோ அல்லது மற்ற பிரச்னைகளோ நிலுவையில் இல்லை என்ற தடையில்லா சான்றிதழ், குறிப்பிட்ட அந்த சொத்திற்கான சொத்து வரி செலுத்துவதற்கான ஆவணங்கள், பிறகு இவை அனைத்தையும் அரசு அலுவலகத்தில் கொடுத்து சொத்தின் உரிமை பற்றிய விவரங்களை கொண்ட சான்றிதழ் ஆகியவை அனைத்தும் சேர்ந்திருந்தால் தான் பொதுவாக ஒரு சொத்து முழுமையாக இன்னொருவருக்கு அதன் உரிமை மாற்றப்படுகிறது என்று அர்த்தமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பதிவு செய்தால் மட்டும் சொத்துகளை முழுமையாக உரிமை கொண்டாட முடியாது: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: