இம்பால்: மணிப்பூரின் சூரசந்த்பூர் மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் கடந்த 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை அசாம் ரைபிள்ஸ் மற்றும் மணிப்பூர் காவல்துறையினர் இணைந்து ஆபரேஷன் ஒயிட் வெய்ல் என்ற பெயரில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர். இதில் கடந்த 6ம் தேதி அதிகாலையில் மியான்மர் எல்லையையொட்டி உள்ள பெஹியாங் கிராமத்தில் 7,755கிராம் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு ரூ.54.20கோடி. இதேபோல் அசாமில் ரூ.45கோடி மதிப்புள்ள 1.5 லட்சம் போதைப் மாத்திரை பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
The post மணிப்பூர், அசாமில் ரூ.100கோடி மதிப்பு போதைப்பொருள் பறிமுதல் appeared first on Dinakaran.