அசாமின் துப்ரியில் தடை உத்தரவு

கவுஹாத்தி: அசாமின் துப்ரி நகரில் கோயிலுக்கு அருகில் இறைச்சி வீசப்பட்டதாக தெரிகிறது. இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து நேற்று முன்தினம் போராட்டங்கள் நடத்தப்பட்டன. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள். ஆங்காங்கே போராட்டங்கள் நடந்தது.

இந்நிலையில் வகுப்புவாத பதற்றம், கலவர ஆபத்து, வன்முறை காரணமாக தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். துப்ரி காவல்நிலைய அதிகார வரம்பிற்குள் வரும் பகுதிகளில் அனைத்து கடைகள் மற்றும் சந்தைகளை மூடுவதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

The post அசாமின் துப்ரியில் தடை உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: