அதிகப்படியான மக்கள் தொகை அடங்கிய குடியிருப்பு பகுதியில் தேவைக்கேற்ப கூடுதலாக வாக்குச்சாவடி மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் நீக்கம், புதிய பெயர் இணைப்பது, பெயர் திருத்தம் செய்வது உள்ளிட்ட பணிகளை விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளது. வாக்காளர்களுக்கு வாக்குச்சீட்டில் பாகம் எண், வாக்காளர் வரிசை எண் உள்ளிட்டவை பிரதானமாக இருக்கும்படி தகுந்த வகையில் வடிவமைக்கப்படும். தேர்தல் மேலாண்மை நிறுவனத்தின் மூலமாக வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு லட்சம் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இந்த வருடத்திற்குள் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த தேர்தல் தொடர்பான அதிகாரிகளுக்கு தேர்தல் மேலாண்மை நிறுவனம் (IIIDEM) மூலமாக பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
The post இனி ஒரு வாக்குச்சாவடிக்கு 1200 வாக்காளர்கள்தான்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல் appeared first on Dinakaran.