மருத்துவர்கள் போராட்டத்திற்கு சுமூக தீர்வு காண மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா பேரிடர் காலத்தில் பணியாற்றி உயிரிழந்த அரசு மருத்துவரின் குடும்பத்திற்கு அளித்த வாக்குறுதியின்படி அரசு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் இன்று சேலம் மேட்டூரிலிருந்து சென்னை வரை நடைபயண போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முழு ஆதரவை தெரிவித்துக் கொள்வதோடு, தமிழக அரசு உடனடியாக போராட்டத்தில் ஈடுபட உள்ள அரசு மருத்துவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் சுமுக தீர்வு காண வலியுறுத்துகிறோம்.

The post மருத்துவர்கள் போராட்டத்திற்கு சுமூக தீர்வு காண மார்க்சிஸ்ட் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: