மதுரை: மதுரையில் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த பள்ளி மாணவர் மீது, ஷேர் ஆட்டோ மோதியதில் நிலைதடுமாறி விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வீடியோ வைரலாகி வருகிறது. மதுரையில் பள்ளிகள் திறந்து மாணவர்கள் பஸ்களில் பயணித்து வருகின்றனர். மதுரை தெப்பக்குளம் பகுதியில் நேற்று முன்தினம் மாலை ஒரு அரசு பஸ்சில் மதுரையை சேர்ந்த மாணவர்கள் சிலர் படிக்கட்டில் கும்பலாக தொங்கியபடி சென்றனர். அப்போது பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த ஷேர் ஆட்டோ முதுகில் மோதியதில் தொங்கிச் சென்ற ஒரு மாணவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார். இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. போக்குவரத்து அதிகாரிகள் கூறும்போது, ‘‘பஸ்களில் படிக்கட்டில் பயணிப்பதை ஒருபோதும் அனுமதிக்க கூடாது என ஓட்டுநர், நடத்துனருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்றனர்.
The post பஸ் படிக்கட்டில் தொங்கிய மாணவர் ஷேர் ஆட்டோ மோதி விழுந்த வீடியோ வைரல் appeared first on Dinakaran.