கிராஸ் நகரில் ஒரு பள்ளியில் உள்ளூர் நேரப்படி காலை 10 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. அது ஓர் உயர்நிலைப் பள்ளி எனத் தெரிகிறது. திடீரென்று பள்ளியின் ஒரு பகுதியிலிருந்து துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டுள்ளது. உடனடியாக வகுப்பறைகளில் இருந்த மாணவர்கள், ஆசிரியர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர்.
சில மணித்துளிகள் களேபரத்துக்குப் பின்னர் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருந்து பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் உள்பட 8 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். பள்ளியில் உள்ள கழிவறைகளில் ஒன்றில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்த நிலையில் கிடந்தார். அவர்தான் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியிருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது
இந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு கிராஸ் நகர மேயர் எல்கே கார் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது ஒரு மோசமான துயரம் என்று அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். போலீஸ் தரப்பில், “சம்பவப் பகுதி முழுவதுமாக தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. பள்ளியில் இருந்து அனைவரையும் அப்புறப்படுத்திவிட்டோம். உயிரிழந்தோர், காயமடைந்தோரின் குடும்பங்களுக்கு வேண்டிய உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. சம்பவம் நடந்த பகுதியில் மேலும் அபாயமான சூழலில் இல்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ஆஸ்திரியா நாட்டில் கிராஸ் பள்ளிக்குள் மர்மநபர் புகுந்து துப்பாக்கிச்சூடு: 11 குழந்தைகள் உயிரிழப்பு appeared first on Dinakaran.