திருத்துறைப்பூண்டி, ஜூன் 10: திருத்துறைப்பூண்டி நகராட்சி சார்பில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தின நிகழ்ச்சியில் நகர் மன்ற தலைவர் கவிதா பாண்டியன் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சி க்கு தலைமையாசிரியர் விஜயன் தலைமை வகித்தார்.
நகராட்சி ஆணையர் துர்கா,ஆசி ரியர்கள் பாஸ்கரன், எழிலரசி, முகமது ரஃபீக், பாலசுப் பிரமணியன், சிவராமன், ஆடின் மெடோனா, வெற்றிச்செல்வி முன்னிலை வகி த்தனர். உதவி தலைமைஆசி ரியர் பாலமுருகன் வரவேற்றார்.நகர் மன்ற தலைவர் கவிதா பாண்டியன் பேசுகையில், சுற்றுசூழல் என்பது இந்த பூமியை சுற்றியுள்ள இயற்கை மற்றும் செயற்கை பொருட்களின் ஒரு தொகுப்பே ஆகும். பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை நிலத்தில் கொட்டுவதாலும், புதைப்பதாலும் நிலம் மாசடைகிறது. நிலத்தின் தன்மையை மாசுபடுத்துவது மட்டும் இன்றி அதை உண்ணும் மனிதர்களுக்கும் பல நோய்கள் உருவாகிறது. அதனால் புயல், சூறாவளி போன்ற இயற்கை சீற்றங்களுக்கு காரணமாக உள்ளது.அதிக வெப்பத்தின் காரணமாக கடல் நீர் மட்டம் அதிகரித்தால் நில அரிப்பு, வெள்ள அபாயம் மற்றும் நீர் நிலைகள் உவர்ப்பாவதற்கான அபாயம் உள்ளது.
The post அரசுபள்ளியில் நடைபெற்ற சுற்றுச்சூழல் நிகழ்ச்சி மாணவர்களுக்கு மஞ்சள் பை வழங்கி விழிப்புணர்வு appeared first on Dinakaran.