கரூர் ஜூன் 10: கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் மரக்கன்று மேயர் கவிதா கணேசன் நட்டு வைத்தார்.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, உலகம் முழுதும் மரக்கன்று நட்டு பராமரிக்க உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மேயர் கவிதா கணேசன் புதிய மரக்கன்றுகள் நட்டு தண்ணீர் ஊற்றினார். மாநகராட்சி ஆணையர் கே.எம். சுதா, மாவட்ட சுற்றுச்சூழல் அணித்தலைவர் 48 வது வார்டு மாமன்ற உறுப்பினர் வேலுச்சாமி மாநகர் நல அலுவலர் டாக்டர் கௌரி சரவணன், நகரமைப்பு ஆய்வாளர் தங்கமணி, சுகாதார ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் பங்கேற்றனர்.
The post கலெக்டர் அழைப்பு கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் மரக்கன்று நடும் விழா appeared first on Dinakaran.