வருசநாடு, ஜூன் 10: கடமலைக்குண்டு ஊராட்சி பழங்குடியினர் வசிக்கும் கரட்டுப்பட்டி கிராமத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் தனி அலுவலர் மாணிக்கம் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு பார்வையாளராக வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன், பார்வையாளராக மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேம்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் வன உரிமை கிராம சபைக்கான தலைவர் மற்றும் செயலாளர் மற்றும் 15 உறுப்பினர்கள் அடங்கிய வன உரிமைக்குழு குழு தேர்வு செய்து ஒப்புதல் பெறப்பட்டது. மேலும் கிராம சபை தீர்மானங்களை ஊராட்சி செயலாளர் சின்னசாமி வாசித்து ஒப்புதலை பெற்றார்.
The post கரட்டுப்பட்டி கிராமத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் appeared first on Dinakaran.