தக் லைப் படத்திற்கு பாதுகாப்பு உச்ச நீதிமன்றத்தில் 13ம் தேதி விசாரணை

புதுடெல்லி: கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர்கள் கமல், சிலம்பரசன் மற்றும் நடிகை திரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 5ம் தேதி நாடு முழுவதும் தக் லைப் திரைப்படம் வெளியானது. குறிப்பாக இத்திரைப்படத்தின் புரோமோஷன் விழா ஒன்றில் கமல்ஹாசன் பேசியது சர்ச்சையானது. இதன் காரணமாக கர்நாடகாவில் தக் லைப் திரைப்படம் வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில் பாதுகாப்பு வழங்கக்கோரி கர்நாடக நாடக சங்கம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் மன்மோகன் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை வரும் 13ம் தேதி அதாவது வெள்ளிக்கிழமை பட்டியலிட்டு விசாரிப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

The post தக் லைப் படத்திற்கு பாதுகாப்பு உச்ச நீதிமன்றத்தில் 13ம் தேதி விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: