உலகில் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்யும் நாடுகளில் 2வது இடத்தை பெற்று இந்தியா சாதனை படைத்துள்ளது. இந்திய பொருளாதாரம் உலகளவில் 4ம் இடத்தை பிடித்துள்ளது. 2027-ல் 3-ம் இடம், 2047-ல் அப்துல்கலாம் கனவு கண்ட வல்லரசு நாடாக இந்தியா மாறும். ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஒரே நாடு, ஒரே தேர்தலும் விரைவில் வரப்போகிறது. தற்போது ஒரு நாடு, ஒரு செயலி என இப்போது நேவா செயலி எம்எல்ஏக்கள், எம்பிக்களுக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. சட்டசபை, நாடாளுமன்றத்தில் நடப்பதை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும். இது இந்த நேவா செயலி மூலம் கொண்டுவரப்படவுள்ளது. புல்லட் ரெயில் சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது. ஜனநாயகத்தின் அடிப்படையான சட்டத்தை இயற்றும் பணியில் இந்த செயலி இருக்கும். இவ்வாறு அவர் பேசினார். நாட்டில் உள்ள 37 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சட்டசபை நடவடிக்கைகளை டிஜிட்டல் மயமாக்க நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. ஒரே நாடு ஒரே செயலி என்ற திட்டத்தின்படி அனைத்து மாநில சட்டசபைகளும் காகிதமில்லா மின்னணு நடவடிக்கைக்கு மாறும் வகையில் ரூ.673.94 கோடி செலவில் பணிகள் நடந்து வருகிறது.
The post ரேஷன் திட்டத்தை தொடர்ந்து விரைவில் ஒரே நாடு, ஒரே தேர்தல்: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் ேபச்சு appeared first on Dinakaran.